×

பெங்களூரு காங்கிரஸ் மாஜி பெண் கவுன்சிலர் வீட்டில் படுக்கைக்கு அடியில் கட்டுக்கட்டாக ரூ.42 கோடி பதுக்கல்: வருமான வரித்துறை அதிரடி பறிமுதல்

பெங்களூரு: பெங்களூருவில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் கவுன்சிலர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்திய நிலையில், அங்கு 23 அட்டை பெட்டிகளில் கட்டுக்கட்டாக ரூ.42 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரு சுல்தான் பாளையத்தை சேர்ந்த மாநகராட்சியின் ஒப்பந்ததாரர் சங்கத்தின் தலைவர் அம்பிகாபதி. அவரது மனைவி அஸ்வதம்மா. பெங்களூர் மாநகராட்சியின் 95வது வார்டு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் கவுன்சிலரான இவரது அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அவரது படுக்கைக்கு அடியில் ேகாடிக்கணக்கான பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. குறிப்பாக அட்டைப்பெட்டியில் கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் இருந்தன. மொத்தம் 23 அட்டை பெட்டிகளில் ரூ.42 கோடி பணம் இருந்தது. ஒவ்வொரு அட்டைப்பெட்டியிலும் ரூ.1 கோடியே 65 லட்சம் ரொக்கப்பணம் இருந்தது. மேலும் காரிலும் பணம் இருந்தது. ெமாத்த பணத்தையும் கைப்பற்றிய வருமான வரித்துறை அதிகாரிகள், அம்பிகாபதி மற்றும் அவரது மனைவி அஸ்வதம்மாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த பணம் 5 மாநில தேர்தலுக்காக கர்நாடக காங்கிரஸ் ஆட்சியாளர்கள் சேர்த்து வைத்து தெலங்கானா மாநிலத்துக்கு அனுப்ப திட்டமிட்டிருந்தனர். இதை மோப்பம் பிடித்து வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி பறிமுதல் செய்துள்ளனர் என்று முன்னாள் முதல்வர் குமாரசாமி குற்றம்சாட்டியுள்ளார். அதே போல் பாஜவும், கர்நாடக மாநில காங்கிரஸ் டெல்லி தலைமைக்கு ஏடிஎம் ேபால் செயல்படுவது நிரூபணமாகியுள்ளது என்று குற்றம்சாட்டியுள்ளது.

The post பெங்களூரு காங்கிரஸ் மாஜி பெண் கவுன்சிலர் வீட்டில் படுக்கைக்கு அடியில் கட்டுக்கட்டாக ரூ.42 கோடி பதுக்கல்: வருமான வரித்துறை அதிரடி பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Ex ,Congress ,Bengaluru ,Income Tax Department ,
× RELATED பாஜகவில் தான் சேரப்போவதாக...