×

ஜெய்ப்பூரில் தனியார் லாக்கர்களில் ரூ.500 கோடி கருப்பு பணம், தங்கம் பதுக்கல்: பாஜ எம்பி பரபரப்பு குற்றச்சாட்டு

ஜெய்ப்பூர்: ஜெய்ப்பூரில் தனியார் லாக்கர்களில் ரூ.500 கோடி பணம், 50 கிலோ தங்கம் பதுக்கப்பட்டுள்ளதாக பாஜ எம்பி கிரோடி லால் மீனா பரபரப்பாக குற்றம் சாட்டியுள்ளார். ராஜஸ்தான் சட்ட பேரவைக்கு வரும் நவம்பர் 25ம் தேதி தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில், ஆட்சியை கைப்பற்ற ஆளும் கட்சியான காங்கிரஸ், பாஜ கட்சிகள் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பாஜ எம்பியும் சவாய் மதோப்பூர் தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கிரோடி மீனா நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறுகையில்,‘‘ ஜெய்ப்பூரில், உள்ள தனியாருக்கு சொந்தமான லாக்கர்களில் ரூ.500 கோடி பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. 50 கிலோ தங்கமும் வைக்கப்பட்டுள்ளது. லாக்கர் இருக்கும் இடத்துக்கு வெளியே நான் அமர்ந்து இருக்கிறேன். போலீசார் வந்து லாக்கர்களை திறக்கும் வரை நான் அங்கு இருப்பேன். பணத்தை பதுக்கிய வைத்தவர்களின் பெயர்களை சொன்னால் அரசியல் அழுத்தத்தால் லாக்கர்களை திறக்க மாட்டார்கள்’’ என்றார். பேரவை தேர்தல் நடக்க உள்ள நிலையில், பாஜ எம்பி வெளியிட்ட இந்த குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post ஜெய்ப்பூரில் தனியார் லாக்கர்களில் ரூ.500 கோடி கருப்பு பணம், தங்கம் பதுக்கல்: பாஜ எம்பி பரபரப்பு குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Jaipur ,BJP ,Kirodi Lal ,
× RELATED பலாத்கார வழக்கில் தலைமறைவான நிலையில்...