×

113வது அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு பாளையங்கோட்டை சிறையில் 9 ஆயுள் கைதிகள் விடுதலை: தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: 113வது அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு பாளையங்கோட்டை சிறையில் உள்ள ஆயுள் தண்டனை பெற்ற 9 கைதிகள் தமிழ்நாடு அரசு உத்தரவுப்படி விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து சிறைச்சாலைகள் மற்றும் சீர்திருத்த சேவைகள் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசின் ஆணைப்படி 113வது அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதிகளாக இருந்த 9 பேர் நேற்று முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டுள்ளனர். விடுதலை செய்யப்பட்ட 9 பேரும், பணகுடி காவல் நிலைய கொலை வழக்கில் தொடர்புடையவர்கள்.

இவ்வழக்கில் 9 பேரும் கைது செய்யப்பட்டு திருநெல்வேலி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தால், குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த கைதிகள் அனைவரும் 14 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை அனுபவித்துள்ளனர். இதனால் தமிழ்நாடு அரசு உத்தரவுப்படி 9 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு கடந்த 2 ஆண்டுகளில் 344 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post 113வது அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு பாளையங்கோட்டை சிறையில் 9 ஆயுள் கைதிகள் விடுதலை: தமிழ்நாடு அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Balayankot jail ,Anna ,Tamilnadu government ,Chennai ,Balayankottai jail ,Tamil Nadu ,Tamil Nadu government ,
× RELATED சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு