×

சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட வழித்தடம் 5ல் ரயில் நிலையங்கள் அமைப்பதற்காக டாடா பிராஜெக்ட்ஸ் நிறுவனத்துடன் ரூ.1817.54 கோடியில் ஒப்பந்தம்

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட வழித்தடம் 5ல் ரயில் நிலையங்கள் அமைப்பதற்காக டாடா பிராஜெக்ட்ஸ் நிறுவனத்துடன் ரூ.1817.54 கோடியில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. கொளத்தூர் சந்திப்பு, சீனிவாச நகர், வில்லிவாக்கம் எம்.டி.எச் சாலை என 5 சுரங்கப்பாதை ரயில் நிலையங்கள் இந்த ஒப்பந்தத்தின் கீழ் அமைக்கப்பட உள்ளது. சென்னை மெட்ரோ இரயில் நிறுவன மேலாண்மை இயக்குநர் மு.அ.சித்திக் தலைமையில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குனர் தி அர்ச்சுனன் (திட்டங்கள்) மற்றும் டாடா ப்ராஜெக்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக துணைத் தலைவர் ராமன் கபில் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

The post சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட வழித்தடம் 5ல் ரயில் நிலையங்கள் அமைப்பதற்காக டாடா பிராஜெக்ட்ஸ் நிறுவனத்துடன் ரூ.1817.54 கோடியில் ஒப்பந்தம் appeared first on Dinakaran.

Tags : Tata Projects ,Route 5 ,Chennai Metro Rail ,Chennai ,Chennai Metro Rail 2nd Line 5 ,Dinakaran ,
× RELATED பெண்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி...