×

ஒரு கோடி பனை விதைகளை விதைத்த சாதனையாளர்களுக்கு பாராட்டு விழா: அமைச்சர், எர்ணாவூர் நாராயணன் பங்கேற்பு

சென்னை: கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கடந்த 1/10/2023 அன்று தமிழ்நாடு பனை மரத்தொழிலாளர்கள் நல வாரியம் சார்பில் ஒரு கோடி பனை விதைகளை கடற்கரை ஓரங்களில் விதைத்த சாதனையாளர்களுக்கு பாராட்டு விழா தமிழ்நாடு பனைமர தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணன் தலைமையில் நடந்தது. கல்லூரி கல்வித்துறை இயக்குனர் கீதா, விஜிபி நிறுவன தலைவர் சந்தோசம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டனர்.

அமைச்சர் சி.வி.கணேசன் சிறப்புரையாற்றி அனைவருக்கும் சான்றிதழ், கேடயம் வழங்கினார். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் செந்தில்குமார், நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பாரதிதாசன் பல்கலைக்கழகம் லட்சுமி பிரபா, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் வெயிலப்பன், அழகப்பா பல்கலைக்கழகம் சீனிவாசன், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் பாண்டி, சென்னை பல்கலைக்கழகம் வினிதா, அண்ணாமலை பல்கலைக்கழகம் எஸ்.கே.குமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர். வழக்கறிஞர் கண்ணன் வரவேற்புரையாற்றினார். வாரிய தலைவரின் உதவியாளர்கள் குமரன், ஜெபராஜ் டேவிட் முன்னிலை வகித்தனர்.

அமைச்சர் சி.வி.கணேசன் பேசுகையில், ”தமிழக முதல்வர் சரியான தலைவரான எர்ணாவூர் நாராயணனிடம் பனைமர தொழிலாளர்கள் நல வாரிய பொறுப்பை வழங்கியுள்ளார். அதன்படி இன்று ஒரு கோடி பனை விதைகள் நடப்பட்டு சாதனை புரிந்துள்ளனர். இந்த நலவாரியம் பல்வேறு சாதனைகளை புரியவேண்டும்” என்றார்.

நிகழ்ச்சியில், சமத்துவ மக்கள் கழக மாநில இளைஞரணி செயலாளர் கார்த்திக், தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் விஸ்வநாதன், மாவட்ட செயலாளர்கள் விஜயன், மதுரை வீரன், ஈரோடு சங்கர் குமார், தர்மபுரி சங்கர், மாநில செயற்குழு உறுப்பினர் சீனிவாசன், ஆர்.கே.நகர் பகுதி செயலாளர் ராஜேஷ், ராயபுரம் பகுதி பொருளாளர் சங்கரபாண்டியன், வடசென்னை மகளிரணி செயலாளர் ஆனந்தி, பொருளாளர் விஜயலட்சுமி உட்பட பலர் கலந்துகொண்டனர். தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர்கள் நல வாரிய செயலாளர் மாதவன் நன்றி கூறினார்.

The post ஒரு கோடி பனை விதைகளை விதைத்த சாதனையாளர்களுக்கு பாராட்டு விழா: அமைச்சர், எர்ணாவூர் நாராயணன் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Minister ,Ernavur Narayanan ,Chennai ,Artist Centenary ,Tamil Nadu Palm Wood Workers Welfare Board ,
× RELATED முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நிபந்தனை ஜாமீன்