×

டெல்லி மதுபான கலால்வரி கொள்கை முறைகேடு வழக்கு: எம்.பி.சஞ்சய் சிங்குக்கு 14நாள் நீதிமன்ற காவல் விதித்து டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவு

டெல்லி: டெல்லி மதுபான கலால்வரி கொள்கை முறைகேடு வழக்கில் கைதான எம்.பி.சஞ்சய் சிங்குக்கு 14நாள் நீதிமன்ற காவல் விதித்து டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுபான விநியோக கொள்கை முறைகேடு தொடர்பாக டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்கின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இந்த சோதனையைத தொடர்ந்து சஞ்சய் சிங் எம்.பி.யை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

டெல்லி அரசின் மதுபான விநியோக கொள்கையில் முறைகேடு செய்தது தொடர்பான வழக்கில் ஏற்கனவே முன்னாள் டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்ததாக ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து சஞ்சய் சிங், டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது சஞ்சய் சிங் எம்.பி.யின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் பல்வேறு முக்கிய ஆதாரங்கள் சிக்கியிருப்பதாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதே சமயம் அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டுகளுக்கு சஞ்சய் சிங் தரப்பு மறுப்பு தெரிவித்தது. இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி, சஞ்சய் சிங்கை 5 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டார். இந்நிலையில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் சஞ்சய் சிங் வழக்கு தொடர்ந்த நிலையில், சஞ்சய் சிங்கை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு 14நாள் டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

The post டெல்லி மதுபான கலால்வரி கொள்கை முறைகேடு வழக்கு: எம்.பி.சஞ்சய் சிங்குக்கு 14நாள் நீதிமன்ற காவல் விதித்து டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Delhi ,Delhi Rose Avenue Court ,Sanjay Singh ,Dinakaran ,
× RELATED டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு...