×

அமெரிக்காவில் ஒரே நேரத்தில் பாலஸ்தீன், இஸ்ரேல் ஆதரவு மாணவர்கள் போராட்டம்: பேரணியில் போட்டி முழக்கங்களை எழுப்பியதால் பரபரப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பலஸ்தீன மற்றும் இஸ்ரேல் ஆதரவு மாணவர்கள் ஒரேநேரத்தில் பேரணி மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஹமாஸ் இயக்கத்தினருக்கு எதிரான போரினை தீவிரப்படுத்தியுள்ள இஸ்ரேல், காசா முனையில் குண்டு மழை பொழிந்து வருகிறது. இருதரப்பு தாக்குதல்களில் 4,000-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி இருக்கும் நிலையில், இஸ்ரேல் தரைவழி தாக்குதல்களை தொடங்க இருப்பதால் பெரும் பதற்றம் நிலவுகிறது.

இந்நிலையில் அமெரிக்காவில் இஸ்ரேல் – பலஸ்தீன ஆதரவு மாணவர்கள் பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். நியூயார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பலஸ்தீன மற்றும் இஸ்ரேல் ஆடஹரவு மாணவர்கள் ஒரே நேரத்தில் பேரணிகளை மேற்கொண்டதால் பல்கலைக்கழக வளாகமே பரபரப்பானது. இரு தரப்பினரும் அருகருகே நின்று இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன கொடிகளுடன் போட்டி முழக்கங்களை எழுப்பியதால் பெரும் பதற்றம் நிலவியது.

இந்நிலையில் உலகளாவிய இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனிய சார்பு ஆர்பாட்டங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருப்பதால் நியூயார்க்கில் கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டு இருப்பதாக மாநகர மேயர் எரிக் ஆடம்ஸ், மாணாக ஆளுநர் ஆகியவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இதனிடையே பிரான்ஸ் தலைநகர் பாரிசில் தடையை மீறி கூடிய நூற்றுக்கணக்கான பலஸ்தீன ஆதரவாளர்கள் பேரணியாக சென்றனர். அவர்களை கலைந்து செல்ல மறுத்ததை அடுத்து கண்ணீர் புகை குண்டுகளை வீசி காவல்துறையினர் கலைக்க முற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஹமாஸ் இயக்க ஆதரவு போராட்டங்களுக்கு நாடு முழுவதும் பிரான்ஸ் அரசு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

The post அமெரிக்காவில் ஒரே நேரத்தில் பாலஸ்தீன், இஸ்ரேல் ஆதரவு மாணவர்கள் போராட்டம்: பேரணியில் போட்டி முழக்கங்களை எழுப்பியதால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : US ,Washington ,Palestine ,Columbia University ,New York City, USA ,
× RELATED சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தை முற்றுகையிட முயன்றவர்கள் கைது