×

பந்தலூர் அருகே உப்பட்டி பெருங்கரை பகுதியில் வேட்டைத்தடுப்பு காவலர் கரடி தாக்கி படுகாயம்

*வனத்துறை சார்பில் கூண்டுகள் வைக்கப்பட்டன

பந்தலூர் : பந்தலூர் அருகே உப்பட்டி பெருங்கரை பகுதியில் பணியில் இருந்த வேட்டைத்தடுப்பு காவலரை கரடி தாக்கியதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே பிதர்காடு வனச்சரகத்திற்குட்பட்ட உப்பட்டி பெருங்கரை மற்றும் ஏலமன்னா, நெல்லியாளம் டேன்டீ உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக கரடி தொல்லை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் உப்பட்டி பெருங்கரை பகுதியில் கரடியை கண்காணிக்கும் பணியில் பிதர்காடு வனச்சரகம் ரேஞ்சர் ரவி தலைமையில் வனத்துறையினர் மற்றும் வேட்டைத்தடுப்பு காவலர்கள், யானை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது, இயற்கை உபாதை கழிக்க சென்ற சிவக்குமார் (27) என்கிற வேட்டைத்தடுப்பு காவலரை புதரில் மறைந்து இருந்த கரடி திடீரென தாக்கியது. கரடி கட்டிப்பிடித்ததால், கரடியிடமிருந்து தப்பிப்பதற்கு சிவக்குமார் கரடியுடன் தரையில் உருண்டு புரண்டுள்ளார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் சக ஊழியர்கள் சத்தமிட்டதை தொடர்ந்து கரடி அங்கிருந்து வனப்பகுதிக்குள் ஓடியுள்ளது.

சக ஊழியர்கள் சிவக்குமாரை மீட்டு பந்தலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்து அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக ஊட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சையில் சேர்த்துள்ளனர். அதிஷ்டவசமாக அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படவில்லை. கரடியின் நகங்கள் பட்டத்தில் சிறு, சிறு காயங்கள் ஏற்பட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் கரடியை பிடிக்க வனத்துறை சார்பில் கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளன.

The post பந்தலூர் அருகே உப்பட்டி பெருங்கரை பகுதியில் வேட்டைத்தடுப்பு காவலர் கரடி தாக்கி படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Upatti Perungarai ,Bandalur ,Pandalur ,Dinakaran ,
× RELATED பந்தலூர் பஜாரில் கழிவுநீர் கால்வாய் அமைத்தும் பயனில்லை