×

மாநகராட்சி அலுவலகத்தில் 18ம் தேதி சிறப்பு சேவை முகாம்

 

திண்டுக்கல், அக்.13: திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் அக்.18ம் தேதி பொது மக்களுக்கான சிறப்பு சேவை முகாம் நடைபெற உள்ளது என மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளதாவது: திண்டுக்கல் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட 48 வார்டுகளிலும் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், புதிய சொத்து வரிவிதிப்பு செய்தல், புதிய குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்குதல்,

பாதாள சாக்கடை இணைப்புகள் வழங்குதல், சொத்து வரி பெயர் மாற்றம் குறித்த கோரிக்கைகள் மற்றும் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக அக்.18ம் தேதி மாநகராட்சி அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் பங்கேற்று தங்களது கோரிக்கைகளுக்கு மனுச் செய்து தீர்வு காணலாம். இவ்வாறு மாநகராட்சி கமிஷனர் தெரிவித்துள்ளார்.

The post மாநகராட்சி அலுவலகத்தில் 18ம் தேதி சிறப்பு சேவை முகாம் appeared first on Dinakaran.

Tags : Service ,Dindigul ,Dindigul Corporation ,Service Camp ,Corporation ,Dinakaran ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை