×

வாலிபரிடம் ₹18.25 லட்சம் மோசடி

சேலம், அக்.13: சேலம் அஸ்தம்பட்டியில் டெலிகிராம் மூலம் நூதன முறையில் வாலிபரிடம் ₹18.25 லட்சம் மோசடி செய்த கும்பல் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர். சேலம் அஸ்தம்பட்டியை சேர்ந்த 32 வயது வாலிபரின் செல்போனுக்கு, கடந்த 4ம் தேதி டெலி கிராம் மூலம் ஒரு லிங்க் வந்துள்ளது. அதில், பணம் ெசலுத்தி டாஸ்கை முடித்தால் அதிகமாக பணம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை நம்பிய அவர், மர்மநபர் அந்த செயலியை பதிவிறக்கம் செய்து, அதில் கேட்டிருந்த விவரங்களை தெரிவித்தார். இவர்கள் தெரிவித்த பல்வேறு வங்கி கணக்குகளுக்கு ₹18.25 லட்சத்தை அனுப்பி வைத்தார். பணத்தை பெற்று கொண்ட மர்மநபர், செல்போன் எண்ணும் சுவிட்ச் ஆப் செய்து விட்டார். ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர், சேலம் மாநகர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அப்புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்த விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதில், இந்த மோசடியில் வட மாநிலங்களை சேர்ந்த கும்பல் ஈடுபட்டிருந்ததும், வாலிபர் அனுப்பிய பணம் பீகார், மகாராஷ்டிரா, அரியானா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் உள்ள வங்கி கணக்குகளுக்கு சென்றிருப்பதும் தெரிய வந்தது. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வாலிபரிடம் ₹18.25 லட்சம் மோசடி appeared first on Dinakaran.

Tags : Salem ,Salem Astampatti ,Dinakaran ,
× RELATED சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர்...