×

கடையநல்லூரில் பெண் தவறவிட்ட நகையை மீட்டு ஒப்படைத்த போலீசார்

கடையநல்லூர், அக்.13: மேல கடையநல்லூர் கட்டி விநாயகர் கோவில் தென்வடல் தெருவை சேர்ந்த திருமலைச்சாமியின் மனைவி பத்ரகாளி (50). கூலித் தொழிலாளியான இவர் கடையநல்லூரில் உள்ள ஒரு வங்கியில் அடகு வைத்திருந்த 10 கிராம் எடையிலான கம்மலை திருப்பி விட்டு கடையநல்லூர் அரசு மருத்துவமனை பஸ்நிறுத்தம் அருகே சென்றபோது கையில் இருந்த தங்க கம்மல் பை தவறி சாலையில் விழுந்தது. உடனடியாக தேடிப் பார்த்தும் கம்மல் பை கிடைக்கவில்லை. பின்னர் அவர் அளித்த புகாரின்பேரில் கடையநல்லூர் எஸ்ஐ கருப்பசாமி பாண்டியன், ஏட்டு சங்கர் ஆகியோர் பஸ் நிறுத்தத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில் சாலையில் கிடந்த கம்மல் பேக்கை வயதான மூதாட்டி ஒருவர் எடுத்துச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து விரைந்துசென்ற போலீசார், மூதாட்டியிடம் இருந்து கம்மலை மீட்டு பத்திரகாளியிடம் ஒப்படைத்தனர். விரைவாக துரிதமாக செயல்பட்டு சாலையில தவறவிட்ட தங்க கம்மலை மீட்டுக் கொடுத்த போலிசாரை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.

The post கடையநல்லூரில் பெண் தவறவிட்ட நகையை மீட்டு ஒப்படைத்த போலீசார் appeared first on Dinakaran.

Tags : Kadayanallur ,Patrakali ,Tirumalaichamy ,South Vadala Street ,Mela Kadayanallur ,Katti Vinayagar ,Temple ,
× RELATED பாம்பு கடித்து விவசாயி பலி