×

திருப்பதியில் செம்மரக்கட்டைகள் கடத்தல் தமிழக கூலி தொழிலாளர்கள் உட்பட 22 பேர் கைது: லாரி, கார், 21 கட்டைகள் பறிமுதல்

திருமலை: ஆந்திர மாநிலம், திருப்பதி செம்மரக்கடத்தல் தடுப்பு அதிரடிப்படை போலீசார் மற்றும் வனத்துறை அதிகாரிகள் கடப்பாவில் இருந்து கர்னூல் மாவட்டம் சாகலமாரிக்கு சென்று இரமடக்கா நோக்கி சந்தேகத்திற்கிடமான வகையில் செல்லும் வாகனங்களை நேற்று முன்தினம் இரவு தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்போது, அவ்வழியாக வனப்பகுதிக்குள் செல்ல இருந்த ஒரு லாரியை நிறுத்தி சோதனை செய்தனர்.

அதில், திருவண்ணாமலை, தர்மபுரியை சேர்ந்த 20 கூலி தொழிலாளர்கள், ஒரு கிளீனர் மற்றும் ஒரு லாரி டிரைவர் என 22 பேர் இருந்தனர். தொடர்ந்து, அவர்களை பிடித்து விசாரித்தபோது, சிரிவெல்ல வனப்பகுதியில் செம்மரம் வெட்ட செல்வதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் கூறிய இடத்தில் சென்று பார்த்தபோது ஏற்கனவே வெட்டி வைக்கப்பட்டு இருந்த 11 செம்மரக் கட்டைகள் இருந்தது. தமிழக கூலித் தொழிலாளர்கள் 22 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

The post திருப்பதியில் செம்மரக்கட்டைகள் கடத்தல் தமிழக கூலி தொழிலாளர்கள் உட்பட 22 பேர் கைது: லாரி, கார், 21 கட்டைகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Tirupati ,Tirumala ,Andhra Pradesh ,Anti Sheep Smuggling Task Force ,Kadapa ,Kurnool ,
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில்...