×

அமைச்சர் ஜெய்சங்கருக்கு ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு

புதுடெல்லி: ஒன்றிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு தற்போது ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. இந்நிலையில் ஜெய்சங்கரின் பாதுகாப்பு ‘ஒய்’ பிரிவில் இருந்து ‘இசட் பிளஸ்’ ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அவருக்கான பாதுகாப்பு வழங்கும் பொறுப்பை ஒன்றிய ரிசர்வ் போலீசிடம்(சிஆர்பிஎப்) ஒப்படைக்கும்படி உள்துறை அமைச்சகம் நேற்று உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து வட்டாரங்கள் கூறுகையில்,‘‘ ஜெய்சங்கருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக உளவு துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில்தான் அவரது பாதுகாப்பை அதிகரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இனி, சிஆர்பிஎப் கமாண்டோ போலீசார் அவருக்கு 24 மணி நேரம் பாதுகாப்பு அளிப்பர் என தெரிவித்தன.

The post அமைச்சர் ஜெய்சங்கருக்கு ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு appeared first on Dinakaran.

Tags : Minister ,Jaishankar ,New Delhi ,Union External Affairs ,Dinakaran ,
× RELATED ஜெர்மன் சர்வதேச பாதுகாப்பு...