×

சில்லிபாயிண்ட்

* ‘சென்னையில் நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளை காண வரும் ரசிகர்களுக்கு இன்று முதல் சுத்திகரிக்கப்பட்ட தனியார் நிறுவன தண்ணீர் புட்டிகள் வழங்கப்படும்’ என்று தமிழ் நாடு கிரிக்கெட் சங்கம்(டிஎன்சிஏ) அறிவித்துள்ளது.

* சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின்(ஐஒசி) செயற்குழு கூட்டம் அதன் தலைவர் தாமஸ் பாக் தலைமையில் நேற்று மும்பையில் தொடங்கியது.

* மலேசியா சென்றுள்ள இந்திய ஆடவர் அணி அங்கு மெர்டெக்கா கோப்பை கால்பந்து போட்டியில் விளையாடுகிறது. இன்று நடைபெறும் அரையிறுதியில் இந்தியா(102வது ரேங்க்)-மலேசியா(134வது ரேங்க்) அணிகள் மோதுகின்றன.

* சென்னை பல்கலைக் கழக மகளிர் கல்லூரிகளுக்கு இடையிலான டென்னிஸ் போட்டி அரும்பாக்கம் டி.ஜி.வைணவக் கல்லூரியில் நடந்தது. அதன் ஒற்றையர், இரட்டையர் பிரிவுகளில் கிறிஸ்துவக் மகளிர் கல்லூரி அணிகளை வீழ்த்தி எம்.ஓ.பி வைணவ மகளிர் கல்லூரி சாம்பியன் பட்டம் வென்றது.

* சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் சார்பில் ஏ டிவிஷன் போட்டி ெசன்னை எழும்பூரில் நடக்கிறது. லீக் ஆட்டம் ஒவ்வொன்றிலும் ஆட்ட நாயகன் தேர்வு செய்யப்பட்டு நினைவுப் பரிசுடன் முதல் முறையாக ஒரு கிராம் தங்க நாணயமும் வழங்கப்படுகிறது.

* கோவாவில் 37வது தேசிய விளையாட்டுப் போட்டிகள் அக்.26ம் தேதி முதல் நடைபெற உள்ளன. அதற்கான ஒலிம்பிக் சுடர் ஓட்டம் கோவாவில் ெதாடங்கியுள்ளது. இந்த ஓட்டம் கோவாவில் உள்ள முக்கிய நகரங்கள் வழியாக பயணித்து போட்டி நடப்பதற்கு முன்னதாக போட்டி நடைபெறும் நேரு அரங்கம் சென்றடையும் .

* அண்ணா பல்கலைக் கழக 3வது மண்டல கல்லூரிகளுக்கு இடையிலான மகளிர் வாலிபால் போட்டி ஜெருசலம் பொறியியல் கல்லூரியில் நடந்தது. அதன் இறுதி ஆட்டத்தில் செயின் ஜோசப் பொறியியல் கல்லூரி 25-9, 25-9 என நேர் செட்களில் வென்று சாம்பியன் பட்டம் வென்றது.

* டெங்கு காய்ச்சல் காரணமாக சென்னையில் சிகிச்சைப் பெற்று வந்த தொடக்க ஆட்டக்காரர் சுப்மன்கில் குணமடைந்தார். அதனால் நேற்று முன்தினம் சென்னையில் இருந்து புறப்பட்டு அகமதாபாத் சென்றடைந்தார். அங்கு நாளை பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள உள்ள இந்திய அணியுடன் நேற்று பயிற்சி மேற்கொண்டார்.

* ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிருக்கான 100மீட்டர் தடை ஓட்டத்தில் இந்தியாவின் ஜோதி யாராஜி வெள்ளி வென்றார். பதக்கம் பெற்ற போது தன் கையில், ‘கவுதம் இது உங்களுக்காக… உங்களை தவற விடுகிறோம்’ என்று எழுதிய அட்டையை கண்ணீருடன் பிடித்துக் கொண்டிருந்தார். கவுதம்தான் முதன் முதலில் ஜோதியின் திறமையை கண்டறிந்தவர்.

சாய் பயிற்சி விடுதியில் சேர்த்து விட்டவர். விலை உயர்ந்த காலணியை ஜோதிக்கு வாங்கி தந்தவர். விளையாட்டு விடுதில் மூத்தவரான கவுதம் ஆகஸ்ட் மாதம் இறுதியில் நடந்த விபத்தில் காலமானார். அது குறித்து ஜோதி, ‘என் திறமையை முதன்முதலில் கண்டறிந்தார். பெற்றோரை போன்று என்னை வழி நடத்தியவர்’ என்று கூறியுள்ளார்.

The post சில்லிபாயிண்ட் appeared first on Dinakaran.

Tags : World Cup ,Chennai ,Silly ,Dinakaran ,
× RELATED உலக கோப்பைக்கு தயாராவதில் தடுமாறும்...