×

ஸ்டேடியம் பொது பாதையை கை வைக்கும் மாநகராட்சி: விளையாட்டரங்க அதிகாரிகள் ஆட்சேபம்

நாகர்கோவில்: நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கம் மற்றும் மாநகராட்சி பொதுப்பாதையில் கட்டுமான பணிகள் மேற்கொள்ள விளையாட்டரங்க அதிகாரிகள் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர். நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கில் தடகளம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு பயிற்சிகள் நடைபெற்று வருகின்றன. இங்கு உள்விளையாட்டரங்குகள் அமைக்க போதுமான இடம் இல்லாத நிலை உள்ளது. இதனால் கோணம் பொறியியல் கல்லூரி பகுதியில் மேலும் சில விளையாட்டு அரங்குகள் அமைக்க இடம் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், நாகர்கோவில் மாநகராட்சிக்காக கலைவாணர் கலையரங்கை இடித்து விட்டு புதிய அலுவலக கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. மாநகராட்சிக்கு சொந்தமான பகுதிகளும், விளையாட்டரங்கத்திற்கு சொந்தமான புற பகுதி, கேலரிகளும் அடுத்தடுத்து உள்ளன. மேலும், சுதந்திர தின விழா போன்ற முக்கிய விழாக்களின் போது, விளையாட்டரங்கத்திற்குள் அதிகாரிகளின் வாகனங்கள், தண்ணீர் லாரிகள்  வருவதற்கும், விளையாட்டு பயிற்சி அல்லது போட்டியின்போது காயமடையும் வீரர் வீராங்கனைகளை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்காக ஆம்புலன்ஸ்கள் வருவதற்கும், பாதுகாப்பு தேவைக்காக தீயணைப்பு வாகனங்கள், காவல்துறை வாகனங்கள் வந்து செல்வதற்கான பிரதான வாயில் மைதானத்தின் தெற்கு பகுதியில் உள்ளது. இந்நிலையில் மாநகராட்சி அதிகாரிகள், ஸ்டேடியத்திற்கு செல்லும் இந்த முக்கியான பாதையை முற்றாக மூடிவிட்டு, தனது அலுவலக பாதையை விஸ்தரிக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொண்டது. இதனையடுத்து, மாவட்ட விளையாட்டு அலுவலர் டேனியல் தங்கள் அலுவலகத்தில் உள்ள ஆவணங்களை கொண்டு வந்து, பொது பாதையை விட்டுத் தருவது பற்றி விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள் தான் முடிவெடுக்க முடியும். எனவே அதுவரை கட்டிடம் மற்றும் சாலை அமைக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டார். இதுபற்றி மாநகராட்சி அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, நாங்கள் எங்களிடம் இருந்த ஆவணத்தின் படி கட்டுமான பணிகள் மேற்கொண்டோம். ஆனால், அவர்கள் வேறு ஒரு ஆவணம்கொண்டு வந்து, விளையாட்டரங்கிற்கு சொந்தமான பகுதி என்கின்றனர். இதுபற்றி கலெக்டர் மற்றும் ஆணையர் முன்னிலையில் பேசி சுமூக முடிவு காணப்படும் என்றார். இதுபற்றி விளையாட்டரங்க நலச் சங்க தலைவர் கண்ணன், செயலாளர் ஜெயின் ஷாஜி ஆகியோர் கூறியதாவது, நீர் நிலைகளில் கட்டிடம் கட்டக்கூடாது என உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறி மாநகராட்சி தறபோது கட்டிடம் கட்டி வருகிறது. தற்போது, போர்டிகோ பகுதிக்காக விளையாட்டரங்க பகுதியை ஆக்கிரமித்துள்ளனர். மேலும், சைக்கிள் நிலையம் போன்ற மக்கள் பயன்பாட்டிற்காக  கட்டுமானம்  இன்றி பூங்கா அமைப்பதற்காக மண் கொண்டு, முன்புறம் உள்ள பள்ளமான பகுதியை நிரப்பியுள்ளனர். எனவே, இனியாவது, விளையாட்டரங்க பகுதியை ஆக்கிரமிக்காமல், பொது பாதையில் கட்டுமானம் கட்டுவதை தவிர்த்து, விளையாட்டரங்க தெற்கு வாயிலை அடைக்காமல் இருக்க வேண்டும். மாநகராட்சி மற்றும்விளையாட்டரங்கம் என இரண்டிற்கும் பொதுபாதையாக இருக்க வேண்டும். இதற்காக முதல்வருக்கு மனு அனுப்பியுள்ளோம் எனக்கூறினர்….

The post ஸ்டேடியம் பொது பாதையை கை வைக்கும் மாநகராட்சி: விளையாட்டரங்க அதிகாரிகள் ஆட்சேபம் appeared first on Dinakaran.

Tags : Stadium Public Path Hand Corporation ,Nagargo ,Anna Playground ,Corporation Public Arrow ,Nagarko ,Stadium Public Track Handheld Corporation ,Dinakaran ,
× RELATED 4 ஆண்டுகளுக்கு பின் கைதான நாகர்கோவில்...