×

கிணற்றில் தவறி விழுந்த மான் மீட்பு

பாலக்காடு: கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம், சாலக்குடி அருகே கிணற்றில் தவறி விழுந்த மானை வனத்துறையினர் பல மணி நேரம் போராடி மீட்டு காட்டில் விடுவித்தனர். திருச்சூர் மாவட்டம், வெற்றிலைப்பாறை பகுதியைச் சேர்ந்த செபாஸ்டீன் ரப்பர் தோட்டத்தில் சுற்றுச்சுவர் இல்லாத பாழடைந்த கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணற்றில் 5 அடிக்கு மேல் தண்ணீர் உள்ளது. இவரது தோட்டத்து இடங்களில் அடிக்கடி வன விலங்குகள் காட்டுப்பன்றி, மான்கள், குரங்குகள், யானைகள் மற்றும் மயில்கள் ஆகியவை இரை மற்றும் தண்ணீர் தேடி வந்து செல்வது வழக்கம். இவரது தோட்டத்தில் சுற்றுச்சுவர் இல்லாத பாழடைந்த கிணறு உள்ளது. இந்நிலையில் கூட்டத்துடன் இரை தேடி வந்த மான்களில் ஒன்று தவறி கிணற்றில் விழுந்துள்ளது. இதுகுறித்து தகவலின்பேரி விரைது வந்த வனத்துறையினர் மானை பலமணிநேரம் போராடி மீட்டு சாலக்குடி வனப்பகுதிக்குள் விடுவித்தனர்.

The post கிணற்றில் தவறி விழுந்த மான் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Palakkad ,Manai Forest Department ,Salakudi, Kerala ,Tiruchur district ,Dinakaraan ,
× RELATED தென் மேற்கு பருவமழை தீவிரம்