×

தென் மேற்கு பருவமழை தீவிரம்

 

பாலக்காடு, ஜூன் 12: கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் அனைத்து ஆறுகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், வயல்களில் தேவைகேற்ப மழைநீர் நிரம்பியுள்ளது. இதனால், நெற்பயிர் நாற்று கத்தைகளை தயார் படுத்தி நடவு செய்கின்ற வயல்களுக்கு அனுப்பிவைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. தென்மேற்கு பருவமழை மே மாதம் 15ம் தேதி துவங்கியுள்ளது.

ஜூன், ஜூலை, செப்டம்பர் ஆகிய 3 மாதங்கள் தொடர்ந்து பெய்து வரும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் நெற்பயிர் சாகுபடி செய்து வருகின்றனர். வயல்களில் ஊடுப்பயிராக தண்டைப்பயிர், வெண்டை, கத்திரி, படவலை, பாவக்காய் என பயிர் விதைகள் விதைத்து வருகின்றனர். வாழை, பூசணி, சேம்பு, சேனை, மரவள்ளிக்கிழங்கு, போன்ற பயிரினங்கள் பயிரிடப்பட்ட நிலைகளில் உள்ளன. தென்னை நாற்றுகள், வாழைக்கன்று ஆகியவை மழை பெய்து வருவதால் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.

The post தென் மேற்கு பருவமழை தீவிரம் appeared first on Dinakaran.

Tags : West ,Palakkad ,Kerala ,Dinakaran ,
× RELATED திருச்சூர், பாலக்காடு மாவட்டங்களில்...