×

பெண் குழந்தைகள் தின விழிப்புணர்வு பேரணி

ராசிபுரம், அக்.12: உலக பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, ராசிபுரத்தில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ராசிபுரம்-சேலம் சாலையில் உள்ள எஸ்ஆர்வி பெண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த பெண்கள் பங்கேற்ற பேரணி, பள்ளி வளாகத்தில் தொடங்கியது. பேரணியை ராசிபுரம் இன்ஸ்பெக்டர் சுகவனம் தொடங்கி வைத்தார். இதில் பங்கேற்ற பள்ளி மாணவிகள், பெண் குழந்தைகளின் பாதுகாப்பு, போதை பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து கோஷங்கள் எழுப்பியபடி சென்றனர். தொடர்ந்து பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து உறுதிமொழி ஏற்கப்பட்டது. நிகழ்ச்சியில், ஆசிரியர்கள் மற்றும் போலீசார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post பெண் குழந்தைகள் தின விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Tags : Girl Child Day Awareness Rally ,Rasipuram ,World Girl Child Day ,Rasipuram-Salem Road… ,Dinakaran ,
× RELATED 3 ஆண்டுகளில் 13,570 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா