×

ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்த அ.தி.மு.க., நிர்வாகி

திருச்செங்கோடு, அக்.12: திருச்செங்கோடு அதிமுக தெற்கு ஒன்றிய பேரவை துணைச்செயலாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் மாரிமுத்து ஆகியோர், தங்கள் ஆதரவாளர்கள் 25 பேருடன், திருச்செங்கோடு யூனியன் துணை சேர்மனும், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணி அமைப்பாளருமான ராஜபாண்டி ராஜவேலு தலைமையில், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்திலை, மாவட்ட திமுக அலுவலகத்தில் சந்தித்து சால்வை அணிவித்து திமுகவில் இணைந்தனர். அவர்களுக்கு மாவட்ட செயலாளர் மதுராசெந்தில் துண்டு அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது மாநில இளைஞரணி துணை செயலாளர் ஆனந்தகுமார் மற்றும் நிர்வாகிகள் இருந்தனர்.

The post ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்த அ.தி.மு.க., நிர்வாகி appeared first on Dinakaran.

Tags : ADMK ,DMK ,Tiruchengode ,AIADMK South Union Council ,Deputy Secretary ,Krishnamurthy ,Marimuthu ,Dinakaran ,
× RELATED சாலை அகலப்படுத்தும் பணிக்காக சாலையோர...