×

2வது நாளாக போலீஸ் பாதுகாப்பு வில்லியனூர் பைபாஸ் சாலையோரம் எம்ஜிஆர் சிலை அகற்றம்

வில்லியனூர், அக். 12: வில்லியனூரில் பைபாஸ் சாலை ஓரமாக எம்ஜிஆர் சிலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதனால் 2வது நாளாக அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
புதுச்சேரி- விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள் நடந்து வருகிறது. அதன்படி, சாலையின் இருபுறமும் அகலப்படுத்தப்பட்டு கழிவுநீர் வாய்க்காலுடன் தார்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. வில்லியனூர் பைபாஸ் சாலையில் எம்ஜிஆர் சிலை இருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மேற்கு எஸ்பி வம்சித ரெட்டி தலைமையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள், போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த எம்ஜிஆர் சிலையை அகற்றி, அதன் மண்டபத்தை இடித்து அப்புறப்படுத்தினர்.

இதுபற்றி அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் மற்றும் கட்சியினருக்கு தெரியவரவே வில்லியனூர் பைபாஸ் ரோட்டில் நள்ளிரவில் குவிந்தனர். எம்ஜிஆர் சிலை அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் வில்லியனூர் பைபாஸ் ரோட்டில் அமர்ந்து திடீரென மறியல் செய்தனர். அவர்களுடன் எஸ்பி பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து அங்கு பதற்றமாக சூழல் நிலவியதால் 2வது நாளாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனிடையே எம்ஜிஆர் சிலை அகற்றப்பட்ட வில்லியனூர் பைபாஸ் சாலை ஓரமாக (கோயில் அருகில்) மீண்டும் அச்சிலையை அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். அதற்கான நடவடிக்கையிலும் ஈடுபட்டு உள்ளதாக தகவல் வெளியாகி வருகின்றன.

The post 2வது நாளாக போலீஸ் பாதுகாப்பு வில்லியனூர் பைபாஸ் சாலையோரம் எம்ஜிஆர் சிலை அகற்றம் appeared first on Dinakaran.

Tags : MGR ,Willianur bypass road ,Willianur ,Dinakaran ,
× RELATED எம்ஜிஆர் நகர் பகுதியில் போதை மாத்திரைகள் விற்ற பெண் உட்பட 5 பேர் கைது