×

பாஜவை சேர்ந்த மாஜி ஒன்றிய அமைச்சருக்கு கோர்ட் சம்மன்

புதுடெல்லி: பாஜ மூத்த தலைவரும் முன்னாள் ஒன்றிய அமைச்சருமான சையது ஷாநவாஸ் உசேன் மீது பெண் ஒருவர் பாலியல் பலாத்கார புகார் அளித்திருந்தார். காவல்துறையினர் அவருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கையை தாக்கல் செய்தனர். அதன் பிறகு முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதற்கு எதிராக பாதிக்கப்பட்ட பெண் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இதை விசாரித்த நீதிபதி, மனுதாரரின் குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மை குறுக்கு விசாரணையின் போதுதான் தெரிய வரும் என்று கூறி வரும் வரும் 20ம் தேதி ஷாநவாஸ் உசேன் நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன் பிறப்பித்து உத்தரவிட்டார்.

The post பாஜவை சேர்ந்த மாஜி ஒன்றிய அமைச்சருக்கு கோர்ட் சம்மன் appeared first on Dinakaran.

Tags : Court ,minister ,BJP ,New Delhi ,Syed Shahnawaz Hussain ,Dinakaran ,
× RELATED உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலம்...