×

திமுக ஆட்சி அமைந்த பிறகு 36 ராஜகோபுரங்களை கட்ட அரசு உத்தரவிட்டுள்ளது: அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்

சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது பழனி எம்எல்ஏ ஐ.பி.செந்தில்குமார் (திமுக) பேசுகையில், ‘‘கொடைக்கானல் பூம்பாறை கிராமத்தில் அமைத்திருக்கக்கூடிய சித்தர் போகரால் வடிவமைக்கப்பட்ட தசா பாஷான முருகன் சிலை அமைந்துள்ள ராஜகோபுரத்தை மீண்டும் புதுப்பித்துத் தர வேண்டும். அக்கோயிலுக்கு வாரத்திற்கு கிட்டத்தட்ட 20,000-25,000 பக்தர்கள் வருகின்றனர். மேலும், சுபமுகூர்த்த தினங்களில் நிறைய திருமணங்கள் நடக்கிறது. ஆகவே, அங்கே ஒரு திருமண மண்டபமும், கோயிலின் ராஜகோபுரத்தை புதுப்பித்து தர வேண்டும்’’ என்றார்.

இதற்கு பதில் அளித்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசுகையில், ‘‘பூம்பாறையிலுள்ள கோயில் ராஜகோபுரத்தைக் கட்டஉறுப்பினர் கோரிக்கை வைத்திருக்கின்றார். இந்த ஆட்சியில பிறகு, 9 நிலை, 7 நிலை, 5 நிலை என 36 ராஜகோபுரங்களைக் கட்டுவதற்கு உத்தரவிட்ட ஆட்சி, கம்பீரமான உள்ளம்கொண்ட எங்களுடைய முதல்வர் மு.க.ஸ்டாலினுடைய ஆட்சி என்பதை இந்த நேரத்தில் கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன். உறுப்பினர் கோரிய பூம்பாறை திருக்கோயிலுக்கும் ராஜகோபுரம் கட்டுவதற்குண்டான பணிகள் மேற்கொள்ளப்படும். அந்தக் கோயிலைப் புனரமைப்பதற்குண்டான பணிகளையும் உடனடியாக மேற்கொள்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்’’ என்றார்.

The post திமுக ஆட்சி அமைந்த பிறகு 36 ராஜகோபுரங்களை கட்ட அரசு உத்தரவிட்டுள்ளது: அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல் appeared first on Dinakaran.

Tags : DMK government ,Minister ,PK Shekharbabu ,Palani ,MLA ,IP ,Senthilkumar ,DMK ,Siddar Bokar ,Kodaikanal Boompara ,
× RELATED திமுக ஆட்சி பொறுப்பேற்று 4ம் ஆண்டில்...