×

புதிய ஓட்டுநர், நடத்துனர் நியமனத்திற்கு பிறகு நிறுத்தப்பட்ட வழித்தடங்களில் பஸ்கள் மீண்டும் இயக்கம்: அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு

வேடச்சந்தூர் எம்எல்ஏ எஸ்.காந்திராஜன் பேசுகையில், கொரோனா பெருந்தொற்று காரணமாக அப்போது தமிழ்நாடு முழுவதும் பேருந்துகள் நிறுத்தப்பட்டன. அந்தப் அரசு பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும்’’ என்றார். இதற்கு பதில் அளித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேசுகையில், ‘‘கடந்த ஆட்சி காலத்தில் கொரோனாவால் பஸ்கள் நிறுத்தவில்லை. போதிய ஓட்டுநர், நடத்துனர்கள் இல்லாத காரணத்தினால் தான் 2000 வழித்தடங்களில் பேருந்துகளை நிறுத்தினார்கள். இப்போது முதற்கட்டமாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்திலே 685 பேர் எடுக்க மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அடுத்தக்கட்ட தேர்வு முடிந்தபிறகு அவர்கள் பணிக்கு வருவார்கள். புதுமைப் பெண் திட்டத்திற்கு பிறகு, கல்லூரி படிப்பு படிக்கும்போது, முதல்வரால் அறிவிக்கப்பட்ட அரசின் உதவித் தொகை கிடைக்கும் என்ற காரணத்தினால், அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கை கூடுதலாகியுள்ளது. எனவே, அவ்வழித்தடங்களில் தற்போது பேருந்துகளின் எண்ணிக்கை கூடுதலாக தேவைப்படுகின்ற வழித்தடங்களை ஆய்வு செய்து பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

The post புதிய ஓட்டுநர், நடத்துனர் நியமனத்திற்கு பிறகு நிறுத்தப்பட்ட வழித்தடங்களில் பஸ்கள் மீண்டும் இயக்கம்: அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Minister ,Shivashankar ,Vedachandur ,MLA ,S. Kanthirajan ,Tamil Nadu ,Corona epidemic ,Sivashankar ,Dinakaran ,
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...