×

முதல்வருக்கு ஈவிகேஎஸ்.இளங்கோவன் நன்றி

சட்டப்பேரவையில் நேற்று ஈரோடு கிழக்கு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் (காங்கிரஸ்) பேசியதாவது: ஈரோடு பகுதியில் உள்ள நான் உள்பட சுமார் 4 ஆயிரம் பேர் பட்டா கேட்டு 75 ஆண்டுகளாக போராடி வந்தனர். பெரியார், அண்ணா, கலைஞர் பணியாற்றிய வீட்டில் தான் நான் இருக்கிறேன். ஆனால், இதுவரை பட்டா இல்லாமல் இருந்தது. தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி காலத்தில் இதற்கு நிவாரணம் கிடைத்துள்ளது. 4 ஆயிரம் பேருக்கு முதல்வர் பட்டா வழங்கி இருக்கிறார். ஈரோடு மக்கள் சார்பில் முதல்வருக்கும், வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், அமைச்சர் முத்துசாமி ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அமைச்சர் எ.வ.வேலுவிடமும் சில கோரிக்கைகள் வைத்துள்ளேன். அதையும் விரைவில் செய்து கொடுக்க வேண்டும்.

The post முதல்வருக்கு ஈவிகேஎஸ்.இளங்கோவன் நன்றி appeared first on Dinakaran.

Tags : EVKS.Elangovan ,Chief Minister ,Erode ,East ,EVKS Elangovan ,Congress ,Legislative Assembly ,Dinakaran ,
× RELATED தாளவாடியில் உங்களை தேடி, உங்கள் ஊரில்...