×

மயிலாடும்பாறை அருகே சிறப்பாறை சாலையை சீரமைக்க கோரிக்கை

வருசநாடு: தேனி மாவட்டம் மயிலாடும்பாறை அருகே பாறைக்குளம் ஓடை முதல் சிறப்பாறை கிராமம் வரை சுமார் 5 கி.மீ தூரம் உள்ள சாலை, பல ஆண்டுகளாக புதுப்பிக்கப்படாததால் தற்போது ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக கிடக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இந்த சாலையைப் புதுப்பிக்க வேண்டும் என சிறப்பாறை கிராம பொதுமக்கள் சார்பில் மாவட்ட நிர்வாகத்தை தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதனைத் தொடர்ந்து டி.என்.ஆர்.ஆர்.ஐ.எஸ் திட்டத்தின் கீழ், மாவட்ட நிர்வாகம் 68 லட்சம் ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்தது.

அதில், ஒரு குறிப்பிட்ட இடங்களில் மட்டும் சாலை பணி நடைபெற்று முடிந்தது. இதனைத்தொடர்ந்து மீதமுள்ள பணி எப்போது நடைபெறும் என விவசாயிகள் எதிர்பார்த்து காத்துக்கிடக்கின்றனர். இது குறித்து விவசாயிகள், விவசாய பொருட்கள் கொண்டு செல்வதிலும், கிராம மக்கள் வாகனங்களில் செல்வதற்கும் மிகவும் சிரமமாக இருப்பதாலும் மாவட்ட நிர்வாகம் இது தொடர்பான நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post மயிலாடும்பாறை அருகே சிறப்பாறை சாலையை சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Jeppara Road ,Mayiladumpara Varasanadu ,Barakhulam Oda ,Jalapa ,Honey District Mayiladumpara ,Mayiladumpara ,Dinakaraan ,
× RELATED சிவராத்திரியை ஒட்டி வரும் மார்ச் 8ம்...