×

ஒடிசா ரயில் விபத்தில் அடையாளம் தெரியாத 28 பேரின் உடல்கள் தகனம்: உரிமை கோராததால் நடவடிக்கை

புவனேஸ்வர்: ஒடிசா ரயில் விபத்தில் அடையாளம் தெரியாத 28 பேரின் உடல்களுக்கு யாரும் உரிமை கோராததால், அவற்றை தகனம் செய்ததாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் நடந்த மூன்று ரயில் விபத்தில் 270க்கும் மேற்பட்டோர் பலியாகினர். அவர்களில் 28 பேரின் உடல்களுக்கு உரிமை கோர எவரும் வரவில்லை.

அதனால் சில நாட்களாக அவர்களின் உடல்கள் பிரேத அறையில் பாதுகாக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அவர்களின் உடல்களை தகனம் செய்வதற்கான செயல்முறைகளை புவனேஸ்வர் முனிசிபல் கார்ப்பரேஷன் (பிஎம்சி) துரிதப்படுத்தியது. அதன்படி ரயில் விபத்தில் அடையாளம் தெரியாத 28 பேரின் உடல்களை இன்று தகனம் செய்ததாக பிஎம்சி மேயர் சுலோச்சனா தாஸ் தெரிவித்தார்.

The post ஒடிசா ரயில் விபத்தில் அடையாளம் தெரியாத 28 பேரின் உடல்கள் தகனம்: உரிமை கோராததால் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Odessa train crash ,Bhubaneswar ,Odisha train crash ,Dinakaraan ,
× RELATED நீரேற்றும் நிலையத்தை நகர்மன்ற தலைவர் ஆய்வு