×

தினை சர்க்கரைப் பொங்கல்

தேவையானவை:

தினை – 100 கிராம்,
கடலைப் பருப்பு,
பாசிப்பருப்பு – தலா 25 கிராம்,
நெய் – 50 கிராம்,
ஜாதிக்காய்ப் பொடி – ஒரு சிட்டிகை,
நெய்யில் வறுத்த முந்திரி, தினை, பாதாம் – தலா ஒரு டீஸ்பூன்,
துருவிய கொப்பரை – 2 டீஸ்பூன்,
வெல்லம் – 150 கிராம்.

செய்முறை:

தினை மற்றும் பருப்பு வகைகளை வெறும் வாணலியில் சிவக்க வறுத்து தேவையான அளவு நீர் விட்டு குழைய வேகவைக்கவும். வெல்லத்தைத் தண்ணீரில் கரைத்து வடிகட்டி, தினைக் கலவையில் சேர்த்து, பொங்கல் பதம் வரும் வரையில் கிளறி இறக்கவும். சூடான நெய்யில் ஜாதிக்காய்ப் பொடி, துருவிய கொப்பரை சேர்த்து வறுத்து, பொங்கலில் சேர்க்கவும். இறுதியாக வறுத்த முந்திரி, தினை, பாதாம் சேர்த்துப் பரிமாறவும்.

The post தினை சர்க்கரைப் பொங்கல் appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED பிரபல நிறுவனங்கள் தயாரிக்கும்...