×

சாத்தூர் மேல்நிலை பள்ளியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு கூட்டம்

சாத்தூர் : சாத்தூர் காவல்துறை சார்பில் சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் சாத்தூரில் உள்ள அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது. இதற்கு சாத்தூர் நகர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் முருகேசன் தலைமை வகித்தார்.

விருதுநகர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சூரியமூர்த்தி கலந்துகொண்டு, பெண் குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாப்பது, பொது இடங்களில் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாலியல் ரீதியாக ஏற்படும் தொல்லைகள், படிப்பை பாதியில் நிறுத்திய குழந்தைகள் மீண்டும் படிப்பை தொடர்வது, பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளிப்பது குறித்து பேசினார். ஏதேனும் அவசர உதவியை பெற பள்ளி மாணவ-மாணவிகள் 181, 1098, 1930 ஆகிய கட்டணமில்லா உதவி எண்களை தொடர்பு கொள்ளலாம் என்றனர். இதனைதொடர்ந்து குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் பள்ளி மாணவிகள் கலந்துகொண்டனர்.

The post சாத்தூர் மேல்நிலை பள்ளியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Chatur ,High School ,International Girl Child Day ,Chatur Police ,Chatur High ,School ,Dinakaran ,
× RELATED பட்டாசு ஆலையில் வெடிவிபத்து; வாலிபர் பலி