×

திருத்துறைப்பூண்டி அருகே தண்ணீரின்றி கருகும் நெற்பயிர்கள்: வாய்க்கால் நீரை குடத்தில் அள்ளி பயிர்களை காப்பாற்ற முயற்சி

திருவாரூர்: திருத்துறைப்பூண்டி அருகே நெல் சாகுபடிக்கு போதிய தண்ணீரின்றி நெற்பயிர்கள் கருகுவதால் வாய்க்காலில் இருந்து தண்ணீரை குடத்தில் எடுத்து வந்து பயிர்களுக்கு ஊற்றும் நிலை ஏற்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் மாதம் பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டது. ஆனால், கடைமடை மாவட்டமான திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் போதிய அளவு தண்ணீர் சென்று சேரவில்லை. உரிய நேரத்தில் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை என்பதால் பயிர்கள் கருகி சேதம் அடைந்தன.

எனவே பலரும் கருகிய பயிர்களை அளித்து விட்டு சம்பா சாகுபடி செய்துள்ளனர். தற்போது சம்பா பயிர்களும் தண்ணீர் இன்றி கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து திருத்துறைப்பூண்டி அருகே வேலூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி ஐயப்பன் வாய்க்காலில் உள்ள தண்ணீரை குடத்தில் எடுத்து வந்து வயலில் ஊற்றி பயிர்களை காப்பாற்ற முயற்சித்து வருகிறார். சம்பா பயிர்களை காப்பாற்ற உடனடியாக தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திய விவசாயிகள் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post திருத்துறைப்பூண்டி அருகே தண்ணீரின்றி கருகும் நெற்பயிர்கள்: வாய்க்கால் நீரை குடத்தில் அள்ளி பயிர்களை காப்பாற்ற முயற்சி appeared first on Dinakaran.

Tags : Thirutharapoondi ,Tiruvarur ,Thiruthaurapoondi ,
× RELATED திருத்துறைப்பூண்டியில் ரூ.1 கோடியில்...