×

அத்திக்கடவு -அவிநாசி திட்டத்தில் விடுபட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது: எஸ்.பி.வேலுமணி கேள்விக்கு அமைச்சர் துரைமுருகன் பதில்

சென்னை: அத்திக்கடவு -அவிநாசி திட்டத்தில் விடுபட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

அத்திக்கடவு -அவிநாசி திட்டம்: அமைச்சர் துரைமுருகன்

அத்திக்கடவு – அவினாசி திட்டத்தில் காரமடை பகுதி குளங்களில் நீர் நிரப்ப வேண்டும் என சட்டமன்ற உறுப்பினரும் அதிமுக முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி கோரிக்கை விடுத்தார். அத்திக்கடவு அவினாசி திட்டத்தை அதிமுக அரசு தொடங்கிவைத்தது என எஸ்.பி.வேலுமணி கூறினார். எஸ்.பி.வேலுமணியின் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் துரைமுருகன், அத்திக்கடவு திட்டம் கொண்டுவந்தது அதிமுக தான்; ஆனால் நிதி அளிக்கவில்லை.

அத்திக்கடவு -அவிநாசி திட்டத்தில் விடுபட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. காளிங்கராயன் அணையில் இருந்து நீர் கிடைத்தவுடன் திட்டம் தொடங்கப்படும் என தெரிவித்தார். அத்திக்கடவு அவினாசி திட்டம் 2ம் ஆய்வு செய்யப்பட்டு அறிக்கை தயார் செய்யப்பட்டு உள்ளது என்றும் அமைச்சர் துரைமுருகன் குறிப்பிட்டார்.

மதுரையில் கால்வாய்களை சீரமைக்க கோரிக்கை: அமைச்சர் துரைமுருகன்

மதுரையில் 13 கால்வாய்களில் 11 சிமெண்ட் கால்வாய்களாக மாற்றப்பட்டுவிட்டன. மதுரை மாநகர விரிவாக்கத்திற்கு பின் கால்வாய்கள் புனரமைக்கப்படவில்லை என பேரவையில் ராஜன் செல்லப்பா குற்றம்சாட்டினார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் துரைமுருகன், மதுரை மாநகராட்சி பெருகிக் கொண்டே போவதால், கால்வாய்கள் சில பாதிக்கப்படுகின்றன. மாநகராட்சி, நீர்வளத்துறை பங்கு எவ்வளவு என உறுப்பினர் கூறினால் சீரமைக்கலாம் என தெரிவித்தார்.

26 பாலிடெக்னிக் மற்றும் 55 கலை அறிவியல் கல்லூரிகளை மேம்படுத்த ரூ.262 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் பொன்முடி

நாகர்கோவில் தொகுதியில் உள்ள கலைஅறிவியல் கல்லூரியில் அடிப்படை வசதிகள் குறித்து சட்டப்பேரவையில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் காந்தி கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் பொன்முடி, 26 பாலிடெக்னிக் மற்றும் 55 கலை அறிவியல் கல்லூரிகளில் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.262 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசு கல்லூரிகளில் ஆய்வகங்கள், வகுப்பறைகள் உள்ளிட்ட கட்டமைப்புகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கல்லூரிகளில் கட்டமைப்புகள் மேற்கொள்ள படிப்படியாக தேவைக்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

The post அத்திக்கடவு -அவிநாசி திட்டத்தில் விடுபட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது: எஸ்.பி.வேலுமணி கேள்விக்கு அமைச்சர் துரைமுருகன் பதில் appeared first on Dinakaran.

Tags : VELUMANI ,Chennai ,Minister ,Duraimurugan ,Atikadavu ,-Avinasi ,Avinasi ,S. B. ,Dinakaraan ,
× RELATED பாஜகவில் தான் சேரப்போவதாக...