×

கனமழை காரணமாக சிறுமுகை சாலையில் ராட்சத மரம் வேரோடு சாய்ந்தது

 

மேட்டுப்பாளையம், அக்.12: மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளான காரமடை, சிறுமுகை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை முதலே தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மேட்டுப்பாளையம் – சிறுமுகை சாலையில் மோத்தேபாளையம் பேருந்து நிறுத்தம் அருகே சாலையோரம் இருந்த சுமார் 80 அடி உயரமுள்ள ராட்சத மரம் அருகில் இருந்த மரத்தையும் சேர்த்து வேரோடு சாய்ந்தன. அதிர்ஷ்டவசமாக வாகன போக்குவரத்து நிறைந்த இச்சாலையில் வாகனங்கள் ஏதும் வராமல் இருந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

இதனையடுத்து அவ்வழியே சென்றவர்கள் மேட்டுப்பாளையம் போலீசாருக்கும், தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் அளித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் பாலசுந்தரம் தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் ஜேசிபி இயந்திரம் மூலம் ராட்சத மரங்களை அறுக்கும் இயந்திரம் மூலம் மரத்தை அறுத்து அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். சாலையில் விழுந்த மரம் முழுமையாக வெட்டி அகற்றப்பட்ட பின்னர் மேட்டுப்பாளையம் போலீசாரால் போக்குவரத்து சீர் செய்யப்பட்டது. ராட்சத மரத்தால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

The post கனமழை காரணமாக சிறுமுகை சாலையில் ராட்சத மரம் வேரோடு சாய்ந்தது appeared first on Dinakaran.

Tags : Leugukai road ,Matuphalayam ,Karamada ,Alupuka ,Dinakaraan ,
× RELATED மேட்டுப்பாளையம் அருகே காரமடை திருமா...