×

விஏஓ.,க்கள் போராட்டம்

ஏற்காடு: ஏற்காடு வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு, தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம், ஏற்காடு வட்டார தலைவர் பாஸ்கர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தகுதி நீக்கம் செய்யப்பட்டவரை உடனடியாக பணியில் அமர்த்த வேண்டுகோள் விடுத்தனர். அதேபோல் ஆத்தூரில் கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர், தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். சிறுமியை கர்ப்பமாக்கிய தொழிலாளி மீது போக்சோ சங்ககிரி: வைகுந்தம் அருகே 17 வயது சிறுமியை திருமணம் செய்து, கர்ப்பிணி ஆக்கிய தொழிலாளி மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். சேலம் மாவட்டம், வைகுந்தம் கிராமம் மேட்டுக்காட்டைச் சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன்(22), கூலித்தொழிலாளி. இவருக்கு தங்காயூரை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் கடந்த 2022 ஜூலை 16ம்தேதி, இளம்பிள்ளை அடுத்த சித்தர் கோயில் பெற்றோர்களுக்கு தெரியாமல் திருமணம் செய்துகொண்டனர்.

The post விஏஓ.,க்கள் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : VAO ,Yercaud ,Yercaud District Development Office ,Tamil Nadu Village Administrative Officers Association ,Yercaud District ,President ,Bhaskar ,VAOs' ,Dinakaran ,
× RELATED கிணற்றில் தவறி விழுந்த பெண் பலி