×

பட்டாசு கடைகளில் போலீசார் அறிவுறுத்தல்

பெரம்பலூர்: நவம்பர் 12ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி பெரம்பலூர் உட்கோட்டத்தில் பெரம்பலூர், பாடாலூர், மருவத்தூர், அரும்பாவூர், காவல் நிலைய எல்லைகளுக்கு உட்பட்ட வெடி மருந்து கிடங்கு உரிமையாளர்கள் மற்றும் நிரந்தர பட்டாசுக் கடை உரிமையாளர்கள் ஆகியோருடன் நேற்று காவல்துறை சார்பாக சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் பாடாலூர் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன், அரும்பாவூர் இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி, எஸ்.ஐக்கள் பெரம்பலூர் சண்முகம், மருவத்தூர் சங்கர் முன்னிலை வகித்தனர். கூட்டத்திற்கு பெரம்பலூர் உட்கோட்ட டிஎஸ்பி பழனிச்சாமி தலைமை வகித்தார். அப்போது அவர் பேசியதாவது: பெரம்பலூர் உட்கோட்டத்தில் உள்ள அனைத்து வெடிமருந்து கிடங்குகளுக்கும் உரிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக சிசிடிவி கேமரா உடனடியாக பொருத்த வேண்டும். தாங்கள் விற்பனை செய்யும் வெடி மருந்து பொருட்களை வாங்குபவர்களிடம் சரியான முகவரியும் அவர்களின் உரிமமும் நகல் பெற்று இருக்க வேண்டும். மேலும் அவரின் தொலைபேசி எண் பெற்று இருக்க வேண்டும். வெடி மருந்து கிடங்கை சுற்றிலும் முள்வேலி அமைத்து தீத்தடுப்பு உபகரணங்கள் அனைத்தும் வைத்திருக்க வேண்டும். தினமும் வெடி மருந்து விற்பனை தொடர்பான விபரங்கள், ஆன்லைன் மற்றும் தங்களது கணக்கு புத்தகத்தில் சரியான முறையில் பராமரித்து வர வேண்டும். சார்ட் ஃபையர்-ன் உரிமம் இல்லாத நபர்கள் யாருக்கும் வெடி பொருட்கள் வழங்கக் கூடாது.

The post பட்டாசு கடைகளில் போலீசார் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Perambalur ,Diwali festival ,Utkotam ,Padalur ,Maruvathur ,Arumbavoor ,Dinakaran ,
× RELATED குழந்தை திருமணம் செய்து வைத்தால்...