×

நாகப்பட்டினம் நகராட்சி பகுதிகளில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பருவமழை பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சி

நாகப்பட்டினம்: கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தீயணைப்பு மற்றும் மீட்புபணித்துறை சார்பில் வடகிழக்கு பருவமழை பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சி நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்தது. கலெக்டர் ஜானிடாம்வர்கீஸ் பார்வையிட்டார். பொதுமக்கள் பேரிடர் காலங்களில் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரையை பின்பற்றி நடக்க வேண்டும். வெள்ளம் வரும் போது மிதக்கும் பொருட்களை வைத்து எவ்வாறு தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும். கட்டிட விபத்தில் சிக்கியவர்களையும், உயரமான இடங்களில் சிக்கியவர்களையும் மீட்கும் முறை குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. வெள்ளம், தீ விபத்து போன்ற நேரங்களில் தற்காப்பு உபகரணங்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்தும் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

The post நாகப்பட்டினம் நகராட்சி பகுதிகளில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பருவமழை பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Disaster ,Artist Centenary ,Nagapattinam Municipal ,Nagapattinam ,Fire ,Department ,Artist Centenary Nagapattinam ,Dinakaran ,
× RELATED தேனியில் சுட்டெரிக்கும் வெயிலால்...