×

போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வாயிற்கூட்டம்

கரூர்: அரசு போக்குவரத்து கழகம் (கும்பகோணம்) கரூர் மண்டல தொழிலாளர்கள் சங்கம் சார்பில் வாயிற்கூட்டம் நடைபெற்றது. கரூர் திருமாநிலையூரில் உள்ள அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த வாயிற்கூட்டத்துக்கு மண்டல தலைவர் பூபதி தலைமை வகித்தார். மாநில சம்மேளன துணைத்தலைவர் கோபிநாதன் கலந்து கொண்டார். மாநில சம்மேளன துணைத்தலைவர் முருகராஜ், கரூர் மாவட்ட செயலாளர் நாட்ராயன், கரூர் மண்டல கவுரவத் தலைவர் ராஜேந்திரன் உட்பட அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். மத்திய சங்க பொருளாளர் சக்திவேல் நன்றி கூறினார். 15வது ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை உடனே உருவாக்க வேண்டும். அரசின் அறிவிப்புகளை செயல்படுத்தும் போக்குவரத்து கழகங்களுக்கு தேவையான நிதியை பட்ஜெட்டில் ஆண்டுதோறும் ஒதுக்க வேண்டும். தேவையான பணியாளர்களை உடனடியாக நியமனம் செய்ய வேண்டும். இறந்துபோன தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு பணி ஆணை வழங்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கை குறித்து இந்த வாயிற்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

The post போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வாயிற்கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Transport Corporation ,Karur ,Public Transport Corporation ,Kumbakonam ,Karur Zone Workers Union ,Tirumadianyur ,Dinakaran ,
× RELATED மூத்த குடிமக்கள் கட்டணமில்லா...