×

குரூப்-4 தேர்வுக்கான இறுதி கீ ஆன்சரை வெளியிட வேண்டும்: டிஎன்பிஎஸ்சிக்கு உத்தரவு

மதுரை: மதுரையைச் சேர்ந்த கண்மணி மற்றும் கீதா ஆகியோர் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: டிஎன்பிஎஸ்சி குரூப்-4 சார்பில் 7,301 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த 30.3.2022ல் வெளியானது. 24.7.2022ல் எழுத்துத்தேர்வு நடந்தது. 18 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதினர். பின்னர் காலியிடம் 10,117 ஆக உயர்த்தப்பட்டது. நாங்கள் இந்த தேர்வில் பங்கேற்றோம். கடந்த மார்ச்சில் தேர்வு முடிவுகள் வெளியானது. இதில், எங்கள் பெயர் இல்லை. நாங்கள் 255 மதிப்பெண்களுக்கு மேல் பெற வாய்ப்புள்ளது. தற்போது குரூப்-4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடந்து வருகிறது. குரூப்-4 தேர்வில் விடைத்தாள் (ஓஎம்ஆர்) மோசடியும், குழப்பமும் நடந்துள்ளது. எனவே, எங்களுடைய தரவரிசையுடன் கூடிய ஓஎம்ஆர் விடைத்தாளை எங்களுக்கு வழங்க வேண்டும்.

எங்களுக்காக இரு இடங்களை காலியாக வைத்திருக்குமாறும், இறுதி கீ ஆன்சர் மற்றும் தேர்வு செய்யப்பட்டவர்களின் விபரங்களை வழங்குமாறும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தனர். இந்த மனுவை நீதிபதி ஆர்.விஜயகுமார் விசாரித்து, குரூப்-4 தேர்வுக்கான இறுதி கீ ஆன்சர் வெளியிடப்பட்டதா, வெளியிடவில்லை என்றால் ஏன் வெளியிடவில்லை? இதுவரை வெளியிடாவிட்டால் உடனடியாக வெளியிட வேண்டும். இதுதொடர்பான அறிக்கையை டிஎன்பிஎஸ்சி தரப்பில் தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டு விசாரணையை இன்றைக்கு தள்ளி வைத்தார்.

The post குரூப்-4 தேர்வுக்கான இறுதி கீ ஆன்சரை வெளியிட வேண்டும்: டிஎன்பிஎஸ்சிக்கு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : TNPSC ,Madurai ,Kanmani ,Geetha ,iCourt ,Dinakaran ,
× RELATED டிஎன்பிஎஸ்சி குரூப் 1 பதவிக்கு 2ம் கட்ட நேர்முக தேர்வு