×

திமுக ஆட்சி ஏற்பட்டு 28 மாதங்களில் ரூ. 600 கோடிக்கும் மேலாக திருப்பணிகளை மேற்கொள்ள உபயதாரர் முன்வந்துள்ளனர்: அமைச்சர் தகவல்

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது புவனகிரி எம்எல்ஏ ஆ.அருண்மொழிதேவன்(அதிமுக) பேசுகையில், ‘‘புவனகிரி வேதபுரீஸ்வரர் கோயில் சோழப் பேரரசர்களால் கட்டப்பட்ட சுமார் 800 ஆண்டுகள் பழமையான கோயிலாகும். இக்கோயிலை புனரமைத்து குடமுழுக்கு நடத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கீழ்வளையமாதேவியில் உள்ள வானவகோடீஸ்வரர் கோயிலையும் புனரமைத்து குடமுழுக்கு செய்ய அரசு முன்வருமா’’என்றார்.

இதற்கு பதில் அளித்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியதாவது: 63 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த கோயில் இப்போதுதான் திருப்பணிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. கீழ்வளையமாதேவி கோயில் திருப்பணிக்கு பொதுநல நிதியிலிருந்து ரூ. 31.30 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆட்சி ஏற்பட்டு 28 மாதங்களில் சுமார் ரூ. 600 கோடிக்கு மேலாக திருப்பணிகளை மேற்கொள்ள உபயதாரர்கள் முன்வந்திருக்கிறார்கள்.

 

The post திமுக ஆட்சி ஏற்பட்டு 28 மாதங்களில் ரூ. 600 கோடிக்கும் மேலாக திருப்பணிகளை மேற்கொள்ள உபயதாரர் முன்வந்துள்ளனர்: அமைச்சர் தகவல் appeared first on Dinakaran.

Tags : DMK ,Bhuvanagiri ,MLA ,A. Arunmozhidevan ,ADMK ,Legislative Assembly ,Vedapureeswarar ,Chola ,
× RELATED ஓசி சிக்கன் ரைஸ் கேட்டு மிரட்டல் பாமக நிர்வாகி கைது