×

வணிகர்களுக்கு சமாதான திட்டம் முதல்வரின் அறிவிப்புக்கு விக்கிரமராஜா வரவேற்பு

சென்னை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா நேற்று வெளியிட்ட அறிக்கை: வாட் வரி நிலுவை சமாதான கோரிக்கையை பேரமைப்பு முதல்வர் மு.க.ஸ்டாலினின் கவனத்திற்கும், துறைசார்ந்த அமைச்சர் மூர்த்தியின் கவனத்திற்கும் தொடர்ந்து எடுத்து சென்று வலியுறுத்தி வந்தது. இந்நிலையில் வாட் வரி சமாதான திட்டத்தை சட்டசபையில் 110 விதியின் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து வணிகர்களின் நீண்டகால பிரச்னைக்கு தீர்வு கண்டிருப்பது மட்டுமல்லாமல் இந்தியாவிலேயே முதல் முறையாக வரிவிதிப்பிற்கு ஒரு சமாதான திட்டத்தை அறிவித்து, அரசு அனைத்து மாநிலங்களுக்கும் ஒரு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.

இந்த அறிவிப்பு சிறுகுறு வணிகர்களுக்கு தீபாவளி பரிசாக அமைகிறது.இந்த வாட்வரி சமாதான திட்டத்தில் 50 ஆயிரத்திற்கு கீழ் வரிநிலுவை வைத்துள்ள சிறுகுறு வணிகர்களுக்கு முற்றிலுமாக வரிவிலக்கு அளிககப்படுவதும், 50ஆயிரம் முதல் 10 லட்சம் வரை வரிநிலுவையில் உள்ள வணிகர்கள் 20 சதவீதம் வரியை செலுத்தி விலக்கு பெற்றுக்கொள்வதும், கிட்டத்தட்ட ஒரு லட்சத்திற்கும் மேல் நிலுவையிலுள்ள வழக்குகள் தள்ளுபடி செய்யப்படும் என்ற இனிய சுழல் வணிகர்களிடம் புத்துணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்பிற்கு வணிகர்களின் சார்பாக முதல்வருக்கும், அமைச்சருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

The post வணிகர்களுக்கு சமாதான திட்டம் முதல்வரின் அறிவிப்புக்கு விக்கிரமராஜா வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : Wickramaraja ,CM ,CHENNAI ,Federation of Tamil Nadu Merchants' Associations ,AM Wickramaraja ,
× RELATED தேர்தல் விதிமுறை தளர்வு வணிகத்தை...