×

ஆவடியில் வீட்டின் பூட்டை உடைத்து 15 சவரன் நகை கொள்ளை

 

ஆவடி: ஆவடி வசந்தம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சேகர் (60). இவர் ஓய்வு பெற்ற ஒன்றிய அரசு ஊழியர் ஆவார். இந்தநிலையில் சேகர் தனது மனைவி மற்றும் மகனுடன் வாணியம்பாடியில் உள்ள உறவினர் வீட்டில் நடந்த, துக்க நிகழ்விற்காக சென்றுள்ளனர். நேற்றுமுன்தினம் இரவு அவர் மீண்டும் வீடு திரும்பியுள்ளார். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு சேகர் அதிர்ச்சி அடைந்தார்.

வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோவும் உடைக்கப்பட்டிருந்தது. அதில் வைத்திருந்த 15 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.15 ஆயிரம் ரொக்கப் பணம் ஆகியவை திருடு போனது தெரிய வந்தது. இதுகுறித்து சேகர் ஆவடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வசந்தம் நகர் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

The post ஆவடியில் வீட்டின் பூட்டை உடைத்து 15 சவரன் நகை கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Sawaran ,Avadi ,Shekhar ,Avadi Vasantham Nagar ,Dinakaran ,
× RELATED காரைக்குடியில் பரபரப்பு: கத்தி...