×

ராஜினாமாவை ஏற்க மறுப்பு முதல்வர் வீடு நோக்கி பாத யாத்திரை சென்ற பெண் கலெக்டர் கைது

போபால்: மத்தியப்பிரதேச மாநிலம், சதர்பூர் மாவட்ட துணை கலெக்ட்டராக பணியாற்றுபவர் நிஷா பாங்ரே. இவர் கடந்த ஜூன் மாதம் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார். ஆனால் அவரது ராஜினாமா கடிதத்தை மாநில அரசு ஏற்க வில்லை என தெரிகிறது. இதனை தொடர்ந்து கடந்த 28ம் தேதி அவர் பீட்டல் மாவட்டத்தில் இருந்து பாத யாத்திரையை தொடங்கினார். இந்த பாத யாத்திரை நேற்று முன்தினம் மாலை போபாலை வந்தடைந்தது. அவர், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் வீடு நோக்கி பாத யாத்திரையை தொடங்கினார். அப்போது போலீசார் அவரை கைது செய்தனர். எஸ்சி பிரிவை சேர்ந்த துணை கலெக்டர் நிஷா, தனது சொந்த கிராமத்தில் நடக்கும் மத நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக விடுமுறை கேட்டபோது தர மறுத்ததால் தனது பதவியை ராஜினாமா செய்ததாகவும், அவர் சட்டமன்ற தேர்தலில் பீட்டல் மாவட்டத்தில் ஆம்லாவில் போட்டியிட விரும்புவதாகவும், அவரது ராஜினாமா ஏற்கப்படாததால் அமைதியாக பாத யாத்திரையை அவர் தொடங்கியதாகவும் அவரது கணவர் தெரிவித்துள்ளார்.

The post ராஜினாமாவை ஏற்க மறுப்பு முதல்வர் வீடு நோக்கி பாத யாத்திரை சென்ற பெண் கலெக்டர் கைது appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Bhopal ,Nisha Bhangre ,Sadarpur District, Madhya Pradesh ,Dinakaran ,
× RELATED சர்ச்சைக்குரிய புத்தகம் வெளியிட்டதாக...