×

சீன தூதரகத்தின் மீது கார் மோதி விபத்து போலீஸ் சுட்டதில் ஓட்டுனர் பலி

சான் பிரான்சிஸ்கோ: அமெரிக்காவில் சான்பிரான்சிஸ்கோ நகரில் அடையாளம் தெரியாத நபர் வேகமாக ஓட்டி வந்த ஹோண்டா செடான் ரக கார் சீன துணை தூதரகத்தின் விசா அலுவலக பகுதிக்குள் நுழைந்து மோதியது. இதனால் அங்கு சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது. அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் காரின் ஓட்டுனரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஓட்டுனர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post சீன தூதரகத்தின் மீது கார் மோதி விபத்து போலீஸ் சுட்டதில் ஓட்டுனர் பலி appeared first on Dinakaran.

Tags : Chinese ,San Francisco ,Honda ,United States ,
× RELATED சீனாவில் வசந்த கால விழா கோலாகல கொண்டாட்டம்..!!