×

வெல்டிங் தீப்பொறியால் சொகுசு கார் எரிந்து நாசம்

சோழிங்கநல்லூர்: சென்னை அபிராமபுரம் ஆர்.கே.மடம் சாலையில், வின் ஆட்டோ கேரேஜ் என்ற பெயரில் ஓர்ஷாப் இயங்கி வருகிறது. இங்கு நேற்று காலை 10.30 மணி அளவில் சொகுசு கார் ஒன்றில் ஊழியர்கள் வெல்டிங் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது, வெல்டிங் தீப்பொறியானது, காரின் இருக்கையில் பட்டதும் தீ வேகமாக பரவியது. இதை சற்றும் எதிர்பார்க்காத ஊழியர்கள் உடனே தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். ஆனாலும் சொகுசு காரின் உட்புறம் முழுவதும் எரிந்து நாசமானது. இதுகுறித்து அபிராமபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வெல்டிங் தீப்பொறியால் சொகுசு கார் எரிந்து நாசம் appeared first on Dinakaran.

Tags : Choshinganallur ,Orshop ,Win Auto Garage ,R. K. Madam Road, Abhiramapuram, Chennai ,Dinakaran ,
× RELATED அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர்...