×

ரெட்டமலை சீனிவாசன் மணிமண்டபம் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: புரட்சி பாரதம் கோரிக்கை

மதுராந்தகம்: ரெட்டமலை சீனிவாசன் மணிமண்டபம் கட்டும் பணிகளை விரைந்து முடித்து திறப்பு விழா செய்ய வேண்டும் என புரட்சி பாரதம் கட்சியினர் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் அடுத்த அண்ணாநகர் பகுதியில் தமிழக அரசால் ரெட்டைமலை சீனிவாசன் நினைவு மணிமண்டபம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. பெரும்பாலான பணிகள் முடிவுற்ற நிலையில் இறுதிகட்ட பணிகள் நடைபெறுவதாக தெரிகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இந்த மணிமண்டபம் அமைந்துள்ள பகுதிக்கு செங்கல்பட்டு தெற்கு மாவட்ட புரட்சி பாரதம் கட்சியின் மாவட்ட தலைவர் சங்கர், மாவட்ட செயலாளர் மூர்த்தி, மாவட்ட அமைப்பாளர் விஜயகுமார், மாநில பொறுப்பாளர் சேகர் உள்ளிட்ட பலர் அங்கு வந்திருந்தனர். அப்போது, அவர்கள் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ள பகுதியின் சுற்றுப்புறங்களில் உள்ள புதர்கள் மற்றும் செடி – கொடிகளை அகற்றி சுத்தப்படுத்தினர்.

மேலும், அவர்கள் கூறுகையில், ‘கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்தப் பணியினை, அரசு சற்று வேகப்படுத்தி எஞ்சி இருக்கும் பணிகளை விரைந்து முடித்துக் கொடுக்க வேண்டும். இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் மற்றும் தமிழக அரசுக்கு கோரிக்கை மனுக்களை அனுப்ப இருக்கிறோம். தொடர்ந்து இந்த மணி மண்டபத்தை திறக்க புரட்சி பாரதம் கட்சி முன்னின்று செயல்படும் என தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில், ஒன்றிய நிர்வாகிகள் சரத்குமார், தேவேந்திரன், சக்திதாசன், யுவராஜ் மற்றும் மதுராந்தகம், சித்தாமூர், லத்தூர், அச்சிறுப்பாக்கம் பகுதிகளை சேர்ந்த அக்கட்சியினர் 200க்கும் மேற்பட்ட கலந்து கொண்டனர்.

The post ரெட்டமலை சீனிவாசன் மணிமண்டபம் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: புரட்சி பாரதம் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Rettamalai ,Srinivasan Mani Mandapam ,Pratachi ,Madhurantagam ,Revolutiya Bharat ,
× RELATED மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன்...