×

நவராத்திரி பிரமோற்சவத்தையொட்டி 19ம் தேதி திருப்பதியில் 1 மணிநேரம் முன்கூட்டி கருட சேவையை நடத்த ஆலோசனை

திருமலை: திருப்பதியில் ஏழுமலையான் கோயில் நவராத்திரி பிரமோற்சவத்தையொட்டி வரும் 19ம் தேதி கருட சேவையை 1 மணிநேரம் முன்னதாக நடத்த ஆலோசனை செய்யப்படும் என்று செயல் அதிகாரி தர்மா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரமோற்சவம் 15ம் தேதி தொடங்கி 23ம் தேதி நிறைவு பெறுகிறது. இதில் முக்கிய வாகன சேவையான கருட சேவை 19ம் தேதியும், 21ம் தேதி புஷ்பக விமானம், 22ம் தேதி தங்க ரதம், 23ம் தேதி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு பெறுகிறது.

கருட சேவை வழக்கமாக இரவு 7 மணிக்கு தொடங்கக்கூடிய நிலையில் அதனை முன்கூட்டியே தொடங்கினால் காலை முதல் நான்கு மாட வீதியில் காத்திருக்கும் பக்தர்களுக்கு விரைவில் சுவாமி தரிசனம் செய்து வைக்க முடியும். எனவே இதுகுறித்து கோயில் அர்ச்சர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. அவர்களும் சூர்ய அஸ்தமனத்திற்கு பிறகு எப்பொழுது வேண்டுமென்றாலும் வைத்துக் கொள்ளலாம் என தெரிவித்தனர். இதுகுறித்து மீண்டும் ஒருமுறை அறங்காவலர் குழு தலைவர் மற்றும் அர்ச்சர்களுடன் ஆலோசித்து கருட சேவை மட்டும் மாலை 6.15க்கு அல்லது 6.30 மணிக்கே தொடங்குவது குறித்து முடிவெடுத்து அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

The post நவராத்திரி பிரமோற்சவத்தையொட்டி 19ம் தேதி திருப்பதியில் 1 மணிநேரம் முன்கூட்டி கருட சேவையை நடத்த ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Navratri Pramotsavam ,Garuda ,Tirupati ,Tirumala ,Seven Malayan Temple ,Navratri Brahmotsavam ,Dinakaran ,
× RELATED கருடன் கருணை