×

தீவிரவாதி பட்டியலில் ரிஸ்வி பெயர் நீக்கம்: மிரட்டலுக்கு பணிந்தது பாக்.

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும், ‘தெஹ்ரீக்-இ-லப்பைக் பாகிஸ்தான்,’ என்ற தீவிரவாத அமைப்பின் தலைவன் ஹபீஸ் சாத் ஹுசைன் ரிஸ்வி. இவன் மீது நூற்றுக்கும் மேற்பட்ட கொலை, தீவிரவாத தாக்குதல் வழக்குகள் உள்ளன. இவனை தீவிரவாதிகள் பட்டியலில் இந்த மாகாண அரசு சேர்த்தது. கடந்த ஏப்ரலில் இவன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான். மேலும், இந்த அமைப்புக்கும் தடை விதிக்கப்பட்டது.இந்நிலையில், லப்பைக் மீதான தடையை நீக்கும்படியும், ரிஸ்வியை விடுதலை செய்யும்படியும், தீவிரவாதிகள் பட்டியலில் இருந்து பெயரை நீக்கும்படியும் கோரி பாகிஸ்தான் முழுவதும் அந்த அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இதனால், பாகிஸ்தான் அரசு திணறியது. இப்பிரச்னைக்கு தீர்வு காண, இந்த அமைப்புடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியது. இதைத் தொடர்ந்து, கடந்த 7ம் தேதி இந்த அமைப்பின் மீதான தடை நீக்கப்பட்டது. மேலும், தீவிரவாதிகள் பட்டியலில் இருந்து ரிஸ்வின் பெயரும் நேற்று நீக்கப்பட்டது….

The post தீவிரவாதி பட்டியலில் ரிஸ்வி பெயர் நீக்கம்: மிரட்டலுக்கு பணிந்தது பாக். appeared first on Dinakaran.

Tags : Rizvi ,Pakistan ,Islamabad ,Hafiz ,Tehreek-e-Labaiq Pakistan ,Punjab ,Dinakaran ,
× RELATED அதிக வரி, போலீஸ் அடக்குமுறை எதிர்த்து...