×

திருப்பதி மலையில் பக்தர்களுக்கு கூடுதல் வசதிகள் செய்ய அறங்காவலர் குழு ஆலோசனை..!

திருப்பதி: திருப்பதி மலையில் அறங்காவலர் குழுவில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பக்தர்களுக்கு பல்வேறு வசதிகளை செய்து தர முடிவு செய்யப்பட்டது. ஆந்திர மாநிலம், திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவின் ஆலோசனை கூட்டம் திருப்பதி மலையில் நடைபெற்றது. அறங்காவலர் குழு தலைவர் கருணாகர ரெட்டி தலைமையில் நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கருணாகர ரெட்டி தொழிலதிபர் சேகர் ரெட்டி நிதி உதவியில் திருப்பதி மலை அடிவாரத்தில் கட்டப்பட்டுள்ள கோ மந்திரம் கோ பூஜை நிலையத்தில் சீனிவாச திவ்ய அனுக்கிர இடைவிடாது ஹோமம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.

பக்தர்கள் விடுமுறை நாட்களில் நீண்டவரிசையில் காத்திருந்திருக்கும் நிலை ஏற்படுகிறது. இதனை ஆய்வு செய்து இதில் அடிப்படை வசதிகள் இல்லை என்பதை தெரிந்துகொண்டனர். இதனால் சுமார் ரூ.18 கோடி செலவில் ஏழு கிலோ மீட்டர் துாரத்திற்கு ஃபுட் கோர்ட், கழிவறைகள் போன்ற வசதிகளை கொண்ட நிரந்தர வரிசையை ஏற்பாடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் தேவஸ்தானத்தின் ஒப்பந்த அடிப்படையில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு செய்யப்படும், சாலைகள் மேம்படுத்தவும், தேவஸ்தானத்திற்கு சொந்தமான பகுதிகளை துாய்மை பணிகளை தேவஸ்தானமே மேற்கொள்ளும், இங்கு வரும் வருமானத்தில் ஒரு சதவீதம் வளர்ச்சி பணிக்கு பயன்படுத்தவும், தேவஸ்தானத்திற்கு சொந்தமான கல்வி நிலையங்களிலுள்ள ஹாஸ்டல் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு தரமான மதிய உணவு வழங்கவும், பக்தர்கள் சமைத்து சாப்பிடுவதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என கூறினார்.

The post திருப்பதி மலையில் பக்தர்களுக்கு கூடுதல் வசதிகள் செய்ய அறங்காவலர் குழு ஆலோசனை..! appeared first on Dinakaran.

Tags : Board of Trustees ,Tirupati Mountain ,Tirupati ,
× RELATED தகாத உறவு காதலியை பெட்ரோல் ஊற்றி உயிரோடு எரித்த கண்டக்டர் கைது