×

இஸ்ரேலுக்கு ஆதரவாக சர்வதேச நாடுகளில் போராட்டம்: செல்போன்களில் டார்ச் லைட் அடித்து இஸ்ரேலுக்கு ஆதரவு

அர்ஜென்டினா: இஸ்ரேலுக்கு ஆதாரவாகவும், எதிராகவும் அமெரிக்கா, பிரான்ஸ், அர்ஜென்டினா உள்ளிட்ட நாடுகளில் போராட்டங்கள் வலுத்துள்ளன. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் படைகளிடையே 4வது நாளாக போர் நீடித்து வரும் நிலையில் இஸ்ரயேலியர்களுக்கு ஆதரவாக பிரிட்டன் தலைநகர் லண்டனில் வசிக்கும் தன்னார்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதே போன்று இஸ்ரயேலியர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாலஸ்தீனியர்களுக்கு ஒற்றுமை காட்டும் விதமாக நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் இறங்கினர்.

இதில் அங்குள்ள ஒரு சாலையில் இரு தரப்பு ஆதரவாளர்களும் சந்தித்த போது மோதல் நிலவியது. இதை அடுத்து அங்கிருந்த போலீசார் இருதரப்பையும் கலைத்தனர். தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினா தலைநகரில் திரண்ட நூற்றுக்கணக்கானோர் இஸ்ரேலுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டனர் அப்போது செல்போன்களில் டார்ச் லைட் எரியவிட்டமாறும், இஸ்ரேல் தேசிய கொடிகளை ஏந்திய வாரும் ஆதரவு தெரிவித்தனர். பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஹமாஸ் இயக்கத்தினர் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நூற்றுக்கணக்கானோர் பேரணி சென்றார்கள் அப்போது ஹமாஸ் இயக்கத்தினரின் பிடியில் உள்ள பானைய கைதிகளை விடுவிக்கவேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

The post இஸ்ரேலுக்கு ஆதரவாக சர்வதேச நாடுகளில் போராட்டம்: செல்போன்களில் டார்ச் லைட் அடித்து இஸ்ரேலுக்கு ஆதரவு appeared first on Dinakaran.

Tags : Israel ,Argentina ,United States ,France ,Hamas ,Dinakaran ,
× RELATED இஸ்ரேல் – ஹமாஸ் போர்: போர்நிறுத்த...