×

உடன்குடியில் சமுதாய வளைகாப்பு விழா 100 கர்ப்பிணிகளுக்கு சீதனப்பொருட்கள்

*அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் வழங்கினார்

உடன்குடி : உடன்குடியில் 100கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடந்தது. இதில் அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு சீதனப்பொருட்களை வழங்கினார்.
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகள் திட்டம் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா உடன்குடியில் நடந்தது. யூனியன் சேர்மன் பாலசிங் தலைமை வகித்தார்.

குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயாதுரை பாண்டியன் வரவேற்றார். திருச்செந்தூர் ஆர்டிஓ குருச்சந்திரன், வட்டார மருத்துவஅலுவலர் அனிபிரிமின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட திட்ட அலுவலர் சரஸ்வதி திட்ட விளக்கவுரையாற்றினார். இதில் 100கர்ப்பிணிகளுக்கு சீதனப்பொருட்களை தமிழக மீன்வளம், மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன் வழங்கி தமிழ்நாடு அரசு பெண்களுக்கு அறிவித்துள்ள திட்டங்கள், நிறைவேற்றியுள்ள திட்டங்கள் குறித்து பேசினார்.

விழாவில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜான்சிராணி, சுடலை, பேரூராட்சி செயல்அலுவலர் பிரபா, பேரூராட்சி தலைவர் ஹீமைரா ரமீஸ் பாத்திமா, யூனியன் துணைச்சேர்மன் மீராசிராசுதின், பேரூராட்சி துணைத்தலைவர் சந்தையடியூர் மால்ராஜேஷ், பேரூராட்சி கவுன்சிலர்கள் அஸ்ஸாப் கல்லாசி, ஜான்பாஸ்கர், மும்தாஜ்பேகம், அன்புராணி, சரஸ்வதிபங்காளன், பாலாஜி, ஆபித், பஷீர், பிரதீப் கண்ணன், சபானா, ராஜேந்திரன், மாநில திமுக வர்த்தக அணி இணை அமைப்பாளர் உமரிசங்கர், மாவட்ட அமைப்பாளர்கள் இளைஞரணி ராமஜெயம், நெசவாளர் அணி மகாவிஷ்ணு, கிழக்கு ஒன்றிய செயலாளர் இளங்கோ, மாவட்ட பிரநிதிகள் ஹீபர்மோசஸ், முபாரக், சிராசூதீன், மதன்ராஜ், மாவட்ட துணைஅமைப்பாளர் மகளிர் தொண்டரணி செண்பவள்ளி, அலாவூதின், மேற்கு ஒன்றிய இளைஞரணி செயலாளர் பாய்ஸ், மாநில காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் சிவசுப்பிரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர். மேற்பார்வையாளர் மலர்கொடி சுகிர்தா நன்றி கூறினார்.

The post உடன்குடியில் சமுதாய வளைகாப்பு விழா 100 கர்ப்பிணிகளுக்கு சீதனப்பொருட்கள் appeared first on Dinakaran.

Tags : Udangudi ,Minister ,Anitha Radha Krishnan Ebengudi ,Ebengudi ,
× RELATED ஒரே நாளில் அனைத்து நவக்கிரக...