×

மண்டபம் அருகே மணக்காடு கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கிய இலங்கை படகு: போலீசார் விசாரணை

ராமநாதபுரம்: மண்டபம் அருகே மணக்காடு கடற்கரை பகுதியில் இலங்கை படகு ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அடுத்துள்ள மணக்காடு கடற்கரை பகுதியில் இன்று காலை 8 மணியளவில் இலங்கையை சேர்ந்த படகை அப்பகுதிமீனவர்கள் கண்டுள்ளனர். படகை கண்டதும் அப்பகுதி மீனவர்கள் கடலோர காவல் படை மற்றும் கடலோர பாதுகாப்புபடைக்கு தகவல் தெரிவித்தனர்.

இதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மெரைன் போலீசார் படகை சோதனை செய்தபோது இலங்கையை சேர்ந்த படகு என்பது தெரியவந்தது. இந்த படகில் இன்ஜின், மீன்கள் உள்ளிட்டவை காணப்பட்டது. இது குறித்து மெரைன் போலீசார், கியூ3 போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அப்பகுதி மீனவர்களிடம் விசாரித்த போது 8 மணி அளவில் படகு வந்ததாகவும். மேலும் படகில் இருந்த 2 பேர் தப்பித்துச் சென்றதாக மீனவர்கள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து போலீசார் மணக்காடு பகுதியில் ரோந்து மற்றும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கை படகை மீட்ட போலீசார், கடத்தல்காரர்கள் யாரேனும் வந்தார்களா என்று விசாரணை செய்து வருகின்றனர்.

The post மண்டபம் அருகே மணக்காடு கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கிய இலங்கை படகு: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Manakkad beach ,Mandapam ,Ramanathapuram ,Ramanathapuram district ,Manakkadu beach ,Dinakaran ,
× RELATED மண்டபம் ரயில் நிலையத்தில் நடைமேடை உயர்த்தி அமைக்கும் பணி தீவிரம்