×

குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: வேடம் தரிப்பவர்களுக்கான ஆடை, அணிகலன் விற்பனை

தூத்துக்குடி: திருச்செந்தூரை அடுத்திருக்கும் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா விழா நெருங்கி வரும் நிலையில் வேடம் அணியும் பக்தர்களுக்கு தேவையான ஆடை, அணிகலன்கள் விற்பனை திருச்செந்தூரில் களைகட்ட தொடக்கியுள்ளது. தசரா திருவிழாவிற்கு புகழ்பெற்ற குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் வரும் 15ம் தேதி தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இதை ஒட்டி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து காளி, முருகன், வள்ளி, தேவாணை உள்ளிட்ட பல தெய்வங்களின் வேடங்களையும் குறவன், குறத்தி, விலங்குகள் போன்ற வேடங்களையும் அணிந்து சூரசம்ஹராம் நடைபெறும் நாள் அன்று தங்கள் நேர்த்தி கடனை செலுத்துவார்கள்.

இந்நிலையில் வேடமணியும் பக்தர்களுக்கு தேவையான பொருட்களை தயாரிக்கும் பணி திருச்செந்தூரில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. காளி உள்ளிட்ட தெய்வ வேடம் போடுபவர்களுக்காக கிரீடம் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. கண் மலர், ஜடாமுடி, மண்டைஓடு, எலும்புக்கூடு, உருத்திராட்ச கொட்டை போன்ற பொருட்களும் ரூ.5,000 வரை விற்பனை செய்யப்படுகிறது.

The post குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: வேடம் தரிப்பவர்களுக்கான ஆடை, அணிகலன் விற்பனை appeared first on Dinakaran.

Tags : Kulasekarapatnam Mutharamman Temple Dussehra Festival ,Thoothukudi ,Kulasekharapattinam Mutharamman temple ,Tiruchendur ,Dussehra festival ,
× RELATED பேக்கரி மாஸ்டரை தாக்கியவர் கைது